ஷக்தி சிதம்பரம் சைசுக்கு கற்பனை.
எப்படியெல்லாமோ பறந்திருக்கு!
பிரபு தேவா- நிக்கி கல்ராணி காதல் திருப்பதிக்கு கல்யாணம் வரை போகுது. முடிவு லட்டா, மொட்டையா என்பதை காமடியா சொல்லி இருக்காங்க.
முடிஞ்சா ‘ப் ஃளாஸ்க்’ ல காப்பி அல்லது டீ எடுத்திட்டுப்போங்க. தப்பா நினைக்காதீங்க. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சா ஒரு ஆறுதலுக்குத்தான்!
பிரபுதேவாவுக்கு என்றும் பதினாறு.வயசே தெரியல. குழப்பங்களை கையாளும் விதமும்,கல்யாணம் நின்று விடாமல் இருப்பதற்காக படும் பாடும் நல்லாருக்கு! டைரக்டர் விரும்புன இடத்தில பைஃ ட் வெச்சிருக்கார். பிரபுதேவா போட்டிருக்கார்.
கல்ராணி அழகுங்க. அவரை மாதிரியே தொடையும் இருக்கு!
அதாஷர்மாவும் நல்லா காட்டியிருக்காங்க திறமையை.!ஆனாலும் தேவையில்லாத உருப்படி!
பிரபுவுக்கு வடை,மசாலா தோசையை காட்டியே கதை சொல்லி இருப்பாங்க போலிருக்கு! கதாநாயகியின் அப்பா. பொறுப்பான வேலை.!
பிரபுதேவாவின் நண்பனாக வரும் விவேக்பிரசன்னா சேதாரமில்லாமல் சிரிக்க வெச்சிருக்கிறார்.யதார்த்தமாக இவர் பேசுறதெல்லாம் வில்லங்கத்தை கொண்டு வருவது படத்தின் பிற்பாதிக்கு சரியான பலம்.
காது கேட்காத மனைவியை கட்டிக்கொண்டு தயாரிப்பாளர் டி.சிவா படுகிற பாடு சிம்பாலிக்காக வெச்ச சீன் மாதிரி தெரியிது.
ஊரெல்லாம் ‘சின்ன மச்சான்’ பாட புத்தகங்களில் இல்லாத பாட்டாகி போச்சு. வாண்டுகள் முதல் காலேஜ் குமரிகள் வரை கேட்கும் விருப்பப் பாடல். இசை அமைப்பாளர் அம்ரீஷின் பின்னணி இசை பிரமாதம்.
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்னு படம் எடுத்திருக்காங்க.