உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவ மனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் கே. பாலசந்தர்(வயது 84 )நேற்று இரவு 7-மணியளவில் காலமானார் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இன்று படப்பிடிப்புகள் அனைத்தும் .ரத்து செய்யப் பட்டது.இதையடுத்து இன்று காலை முதல் தமிழ்த்திரையுலகமே திரண்டு அஞ்சலி செலுத்தியது.இதையடுத்து . இன்று மதியம் 2.30 மணியளவில் அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் ஊர்வலமாகஎடுத்து செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்தில் மாலை ஐந்து மணியளவில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது..வழி நடுவே ஏராளமான மக்கள் கூடி தங்கள் வருத்தங்களை தெரிவித்தனர். இதில் கடைசி வரை நடிகர் ரஜினிகாந்த், பிரகாஷ்ராஜ், விவேக் இயக்குனர் அமீர், வசந்த் ஆகியோர் கண்ணீருடன் தங்கள் குருநாதரை வழி அனுப்பி வைத்தனர்./பாலசந்தரின் இன்னொரு கலையுலக வாரிசான கமல் உத்தமவில்லன் படபிடிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார் .முன்னதாக பாலசந்தரின் உடல் நாளை காலை தகனம் செய்யப்படுவதாக திட்டமிடபட் டிருந்தது. எனவே கமலும் இன்று இரவு சென்னை திரும்புவதாக இருந்தது. இந்நிலையில் தகன நேரம் இன்று காலை மாற்றப்பட்டதால் கமல் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாத நிலை உருவானது.