கோலிசோடா படத்தை தொடர்ந்து ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்க, விக்ரம் – சமந்தா இருவரும் நடித்து வரும் ‘பத்து எண்றதுக்குள்ள…’ படத்தின் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியில் விக்ரமும் சமந்தாவும் கலந்து கொண்டு டீசரை வெளியிட்டார்கள்.
அப்போது பேசிய சமந்தா…
படத்தோட டைரக்டர் விஜய் மில்டன் ஒரு’சாடிஸ்ட்'(பிறர் துன்பத்தில் இன்பம் காணுபவர்) . அவர் என்னை ரொம்ப கொடுமைப் படுத்தினார் . அடித்தார் . திட்டினார். எனக்கு அவரால் காயம் கூட ஏற்பட்டது . ஆரம்பத்துல அவர்தான் அப்படின்னா , அப்புறம் விக்ரமும் தன் பங்குக்கு தானும் ஒரு சாடிஸ்ட் ஆகவே நடந்துக்கிட்டார் ” என்றார்.
அதை கேட்டு விக்ரம் முகம் சிவந்து கடு கடு என்றாகிவிட்டது.ஆனால்,
நீண்ட நாள் தன் மனதில் இருந்த பாரத்தை பத்திரிகையாளர்களின் முன் இறக்கி வைத்து விட்டோம் என்ற மகிழ்ச்சியில் இருந்தார் சமந்தா.இதனால் கடுப்பாகி ,நிகழ்ச்சியை தொடர்ந்து பேட்டி கொடுப்பதாக இருந்த விக்ரம்,தனக்கு ஷுட்டிங் இருப்பதாக சொல்லிவிட்டு எஸ்கேப்பானார்.
சினிமா படவிழாவில் , இப்படி தைரியமாக பேசிய சமந்தாவை விழாவிற்கு வந்திருந்த பலரும் பாராட்டினார்கள்..