“ஏப்பு…நாட்டு நிலவரம் எப்படி இருக்கு?”
“கண்ட சல்லிப்பயல்லாம் அரசியல் பேசராய்ங்க. நம்ம பெரியப்பு மட்டும் கொடுத்த வாக்க மறந்திட்டாங்க போலிருக்கு! வர்றோம்னாக, இப்ப அந்த பேச்சய எடுக்கமாட்டோம்றாக!”
“விட்றப்பா! அத ஏன் நோண்டிக்கிட்டிருக்கே! அவுகதான் இன்னும் ரெண்டு படத்ல நடிக்கப் போறாகலாம்ல! அது போதும்பே! கெத்துக்காட்டிக்கிட்டு நாம்ப இருக்கலாமே. தலைவர் ஸ்டைல விடவா அரசியல் பெரிசு?”
“கமல்லாம் பெரிசா படம்காட்டிக்கிட்டு சலம்புறப்ப நமக்கு பொங்குதே! எப்படிய்யா அமுங்கிட்டு இருக்க முடியும்? நாம்ப என்ன சொம்பயா? தூக்குப்போனில பழைய சோத்த எடுத்துக்கிட்டு போன காலமெல்லாம் போயிடிச்சி! கருவாடு சுட்டகாலத்த ஏன் நெனச்சிக்கிட்டிருக்கே? நாம்பளும் எம்மெல்லே ,எம்ம்பி யாக வேணாமா?”
” அடே சோக்காளி, பாகுபலி படம் எடுத்த ராஜமவுலி நம்ம தலைவர்க்காக கத பண்ணி வச்சுருக்காராம். அதில நடிச்சிப்பிட்டு அரசியலுக்கு வரப்போறார்னு சொல்றாங்க. அதுக்கு முன்னாடி இன்னும் ரெண்டு படம் நடிச்சிடுவாராம்.அது போதும்பே!”
“அப்ப இப்ப வரல அரசியலுக்கு!”