ஊர்ல கல்யாணம் ,மார்ல சந்தனம்னு எங்க கிராமத்து அம்மாச்சி அப்பாத்தாக்கள் சொல்லிக்குவாங்க. அது மாதிரி ஆகிப் போச்சுங்க நம்ம ஊரு நிலைமை.!
ஆசிரியர்கள்.விடாம போராடிக்கிட்டிருக்காங்க. சி.எம். எடப்பாடியை சந்திச்சுப் பேசணும்னு கோரிக்கை.
பேசுனா தப்பா? அரசு ஊழியர்கள் நாட்டு சி.எம்.மை சந்திக்கனும்னு கேக்கிறது குத்தமாய்யா!
எறங்கி வந்து பேசுனா கிரீடம் எறங்கிடுமா?
இப்படி ஒரு பிரச்னை ஓடிட்டிருக்கு.
தமிழ்நாடு வந்த பிரதமர் மோடிஜி தமிழ்நாடு சி.எம்.மை கூப்பிட்டு “பேச்சு வார்த்தை நடத்தி பிரச்னையை சால்வ் பண்ணுங்க”ன்னு சொல்லியிருந்தால் அவரு உசந்த மனுசந்தான்!
இதைத்தான் நம்ம கருத்து கஸ்தூரி இப்படி சுருக்கமா டிவீட் பண்ணிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.
“அவுரே அஞ்சு வருசத்துல ஒருக்கா ரெண்டுக்கா தான் இந்த பக்கமே வர்றாரு. அப்பயும் #GoBackModi னு சொல்லி துரத்திட்டா என்னா பண்ணுறது? தமிழ் நாட்டு பஞ்சாயத்துக முடியறவரைக்கும் வெளிநாட்டுக்கு பறக்க முடியாதுன்னு அமுக்கி பிடிச்சுக்குங்கப்பா !”