- கட்டவுட், பாலாபிஷேகம் குறித்த் விவகாரம் தொடர்பாக இன்று
காலை நடிகர் சிம்பு கூறியதாவது,
தயவுசெய்து நான் பேசிய வீடியோவை இன்னும் ஒரு தரம் பாருங்க பாக்கெட்ல ஊற்றாதீர்கள் பாலை ,அண்டாவில் ஊற்றுங்கள் என்றுதான் சொன்னேன் என் கட் அவுட்டுக்கு என்று நான் சொல்லவில்லை .நான் மாற்றிப் பேச வில்லை. எல்லோரையும் மாற்றுவதற்காக தான் பேசினேன் இதுதாங்க உண்மை இந்த உயிர் அன்னைக்கு போன அன்னைக்கு தான் இந்த விஷயத்தை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கனும் என்கிறதுக்காக அன்னிக்கு அந்த மேடையில் நான் பேசினேன் நான் சொன்ன விதம் தவறா இருந்தா கூட ,தப்பா பேசியிருந்தா நான் மன்னிப்பு கேட்டுக்கறேன் இப்பவும் என் பேச்சை மாற்றி பேசல, திரும்பவும் சொல்றேன் பாக்கெட்ல இல்ல ,அண்டாவில் ஊத்துங்கன்னு தான் சொல்றேன். எதுக்கு சொல்றேன்னா அண்டா அண்டாவா பாலை காய்ச்சி வர்ற மக்களுக்கு, பேசவே முடியாத ஒரு கட்அவுட்டுக்கு ஊற்றுவதற்கு பதிலாக வாயுள்ள ஜீவன்களுக்கும் ,வாயில்லாத ஜீவனா கூட இருக்கட்டும் ,கஷ்டப்படுறவங்களுக்கு அந்த பாலை குடுங்க .வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் அப்படின்னு வள்ளலார் சொன்னாரு உண்மையிலேயே என் மனசுக்குள்ள இருக்கு. இத பத்தி என்ன சொல்லட்டும் எப்படி வேணா எடுத்துக்கட்டும். அதை பத்தி எனக்கு கவலை இல்லை இவ்வாறு சிம்பு கூறினார் இந்நிலையில் விவகாரத்தில் நடிகர் சிம்பு பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டதால் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் சங்கம் சிம்புவுக்கு நன்றியை தெரிவித்து உள்ளதாக பொன்னுசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.