பேட்ட படம் கமர்ஷியலாக ஹிட் அடித்தும் கூட அடுத்த படம் யாருடன் என்கிற பரபரப்பு இல்லாமல் இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
இவரது ஜிகர்தண்டா படம் தமிழ்ச்சினிமாவில் புதிய பாதையை காட்டியது.ஆனால் பேட்ட படம் வேறு மாதிரியான கமர்சியல் களத்துக்கு கூட்டிக்கொண்டு போய் இருக்கிறது.
மக்கள் மத்தியில் எந்த நடிகர்களுக்கு எத்தகைய படங்கள் எடுபடுகிறது என்கிற அளவுக்கு ஏற்ப படங்களை பண்ண வேண்டியதாக இருக்கிறது.அந்த வகையில் அடுத்த படம் தனுஷுக்கு என்கிறார்கள்.
தனுஷ் -வெற்றிமாறன் அலை வரிசை யில் வெளியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பேசப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.
பேட்டக்குப் பிறகு அதிக பொருட்செலவில் படங்கள் எடுக்கவேண்டும் என்கிற எண்ணம் கார்த்திக் சுப்புராசுக்கு இருப்பதாக சொல்கிறார்கள் .அதாவது இன்னொரு ஷங்கர் ஆக வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறதாம்!