ரஜினி-ரஞ்சித் இணையும் புதிய படத்திற்கு தற்போது கண்ணபிரான் என்ற படத்தலைப்பு சூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இதற்கு முன்பாக காளி,கபாலி,என்ற பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது. காளி என்றதலைப்பில் ரஜினி நடித்த படம் ஏற்கனவே வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.உக்கிர தெய்வத்தின் பெயர் என்பாதாலோ என்னவோ, அப்போது இதன் படப்பிடிப்பில் சில விரும்பதகாத சம்பவங்கள் நிகழ்ந்ததாக கூறப்பட்டது.இதன் காரணமாக காளி படத்தலைப்பில் ரஜினிக்கும்,தயாரிப்பாளர் தானுவிற்கும் உடன்பாடு இல்லையாம். இந்நிலையில்,இப்படத்திற்கு “கண்ணபிரான்” என்ற தலைப்பை வைக்க ரஞ்சித் விரும்பியதாகவும் இந்த டைட்டில் இயக்குநர் அமீரிடம் இருப்பது தெரிந்து படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் அமீரிடம் பேசி கண்ணபிரான் தலைப்பை வாங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.செப்டம்பர் 18ம் தேதி தொடங்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முதல் கட்டமாக மலேசியாவில் படமாக்கப்படவுள்ளது, இதற்காக ரஜினி மற்றும் படக்குழுவினர் அனைவரும் செப்டம்பர் 17ம் தேதி மலேசிய பறக்கவிருக்கிறார்களாம். ஏற்கனவே இயக்குநர் ரஞ்சித் மலேசியா சென்று படப்பிடிப்பிற்காக லொக்கேஷன்களை பார்த்து ஓகே செய்துவிட்டாராம்…