விஸ்வாசம் புதிய சாதனையை படைத்து விட்ட மகிழ்ச்சியில் இயக்குநர் சிவா வேறு படத்துக்கான வேளைகளில் இறங்கிவிட்டார்.
தல அஜித்குமாரோ சொன்ன சொல்லை காப்பற்றுவதற்காக போனிகபூரின் பிங்க் ரீமேக் படத்திற்கான ஆயத்த வேளைகளில் இறங்கி விட்டார்.
கதைப்படி 3 பெண்கள் வேண்டும்.
நிஜமாகவே வக்கீல் வேலை பார்த்த அனுபவம் உள்ள நடிகையைஅவர்களில் ஒருவராக நடிக்க வைத்தால் என்ன?
அங்கே வேலை செய்தது அஜித்குமாரின் முன்யோசனை!
பிடி ஷ்ரத்தா வை!
விக்ரம் வேதாவின் நாயகி.! கன்னட நடிகை. அங்கு இவரது யூ டர்ன் படம் பேசப்பட்டது.
தற்போது இயக்குநர் வினோத்தின் இயக்கத்தில் பேசப்போகிறார்.