காலம் மாறுது சார்!
“ஓட்டுப் போடுறதுக்குன்னு கை நீட்டி காசு வாங்கினில்ல! தோத்தாச்சு! வாங்கின காசை மரியாதையா திருப்பிக் கொடு”ன்னு கேட்கிற காலம் வந்தாச்சு!
பக்கத்து மாநிலம்தான் தெலங்கானா. அங்கே உள்ளாட்சி தேர்தல் நடந்தது.
உள்ளாட்சி தேர்தல்னா நமக்கு என்ன தெரியும்? அதான் மறந்து போச்சே!
ஆனா தெலங்கானாவில் நடந்தது.
ஒரு வார்டில் போட்டி காங்கிரஸ் சார்பில் ஹேமாவதி போட்டி போட்டாங்க,! தோத்துட்டாங்க,!
20 ஓட்டுதான் வாங்கினாங்க. அந்த அம்மாவின் புருசனுக்கு கடுங்கோபம்.
ஒரு ஓட்டுக்கு 500-ல் இருந்து 700 ரூபாய் வரை கொடுத்திருக்கிறார்.
” காசை வாங்கிட்டு ஏமாத்திட்டிங்களா? காசை திருப்பிக் கொடுங்க” என்று வீடு வீடாகப் போய் கேட்டு வருகிறார் கணவர் பிரபாகர்.
இதுவும் ஒரு மாற்றம்தானே!