லைகாவின் அடுத்த பிரமாண்டம் இந்தியன் 2.
ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வருகிற படம்.!
சென்னை நகருக்கு வெளியில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் சிலர் கறுப்புக் கட்டம் கட்டினார்கள். “கமலின் இந்தியன் தாத்தா வேடம் இயக்குநர் ஷங்கருக்குப் பிடிக்கவில்லை.அதனால் படப்பிடிப்பை தள்ளி வைத்து விட்டார்கள் என்பதாக!
லைகா வட்டத்தில் விசாரித்தோம். “இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு இரண்டு நாளும் கமல்,ஷங்கர் இருவரும் வரவேண்டும் என்று கேட்டார்கள். அதனால் தள்ளி வைக்கப்பட்டதே தவிர வேறு எந்த காரணமும் இல்லை. பிப்.9 ம் தேதி அனைவரும் பாரீன் புறப்படுகிறார்கள் .அங்கு தொடர்ந்து ஷூட்டிங் நடக்கவிருக்கிறது. விசாவுக்காக வெயிட்டிங்”என்கிறார்கள்.