CAST: Simbu, Hansika, Santhanam, Aditya, VTV Ganesh, Naren, Sriranjani, Mahadevan
DIRECTION: Vijay Chander
GENRE: Romance
DURATION: 2 hours 34 minutes.Rating 3/5.
வாலு வரும்,ஆனா வராது! என்கிற பாணியில் அனைவராலும் விமர்சிக்கப்பட்ட வாலு கிட்ட தட்ட மூன்று வருட இடைவெளிக்கு பின் பிரச்சனைகள் முடிந்து வெளியே வந்து விட்டது.விஜய் தலையிட்டு இப்பிரச்சனையை தீர்த்து வைத்ததாலோ ,என்னவோ ஒப்பனிங் ரஜினி,கமல்,விஜய்,அஜித் படங்களுக்கு நிகராக இருந்தது! சரி!,இனி கதைக்கு வருவோம்! சிம்பு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞர்.. இவரது அப்பா நரேன் ரெயில்வே ஊழியர் .பிளஸ்-டு தேர்வில் தோல்வியடைந்த சிம்பு, வேலை தேடி அலைகிறார்.இந்நிலையில்,பணக்கார குடும்பத்து பெண்ணான ஹன்சிகா தனது அப்பா ஆசையாக வாங்கிக் கொடுத்த ஐபோனை தொலைத்துவிடுகிறார். இது சிம்புவின் கண்களுக்கு தென்பட ஐபோன் சிம்புவின் வசமாகி விடுகிறது.
தொலைந்துபோன ஐபோன் சிம்பு கைவசம் இருப்பதை அறிந்துகொண்ட ஹன்சிகா, அதை சிம்புவை நேரில் சந்தித்து வாங்கிக்கொள்வதாக கூறுகிறார். இதற்கிடையில், ஹன்சிகாவை அவர் யாரென்று தெரியாமலேயே பஸ்ஸில் சந்திக்கிறார். சிம்பு. பார்த்தவுடனேயே சிம்புவுக்கு ஹன்சிகா மீது காதல் வந்துவிடுகிறது.ஹன்சிகாவை பின் தொடருகிறார்.,ஒருகட்டத்தில் ஹன்சிகாவிடம் தனது காதலை சொல்கிறார். ஆனால், ஹன்சிகாவோ இவரது காதலை நிராகரிக்கிறார். மேலும்,தனது முறைமாமனுடன் தனக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டதாகவும், இன்னும் 2 வருடத்தில் திருமணம் நடக்க உள்ளதாகவும் கூற,. அதிர்ச்சியடையும் சிம்பு, இருவரும் நண்பர்களாக பழகுவோம்என்கிறார்.ஹன்சிகாவும் ஒப்புக்கொள்கிறார்.இதற்கிடையே சிம்பு,, ஹன்சிகாவிடம் நட்புடன் பழகி 2 வருடத்திற்குள் தனது காதலை அவருக்கு புரிய வைத்துவிட வேண்டும் என்ற திட்டத்துடன் அவளுடன் பழக ஆரம்பிக்கிறார். ஆனால், ஹன்சிகாவின் முறைமாமனோ, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, என மிகப்பெரிய தாதாவாக வலம் வருபவர். இதையடுத்து
ஹன்சிகாவுக்கு சிம்பு,தனது காதலை புரிய வைத்து அவரை திருமணம் செய்தாரா?இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் பார்த்த ரொமாண்டிக் சிம்புவை இதிலும் பார்க்க முடிகிறது. அதேபோல், சந்தானம், விடிவி கணேஷுடன் சேர்ந்து கலாட்டா செய்வதிலும் நடிப்பில் அசத்துகிறார். சண்டைக்காட்சியில் மாஸ் காட்டியிருக்கிறார்.
ஹன்சிகாவும் சிம்புவுடன் போட்டி போட்டு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சந்தானத்தின் காமெடி அவருக்கு மிகவும் கைகொடுத்திருக்கிறது. இவர் அடிக்கும் ‘பஞ்ச்’ புதிதாகவும், ரசிக்கவும் வைக்கிறது.. சிம்பு-சந்தானம்-விடிவி கணேஷ் கூட்டணி இந்த படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது .சிம்புவுக்கு அப்பாவாக வரும் நரேன், அம்மாவாக வரும் ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் தங்களது கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள். முறைமாமனாக வரும் ஆதித்யா, வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். பிரம்மானந்தம் ஒருசில காட்சிகளே வந்தாலும் ரசிக்க வைக்கிறார்.‘ஓ மை டார்லிங்’ பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. சிம்பு எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித் கெட்டப்பில் வரும் தாறுமாறு பாடல் ஆட்டம் போட வைப்பது மட்டுமில்லாமல் ரசிக்கவும் வைக்கிறது
இயக்குனர் விஜய் சந்தர். அழகான காதல் கதையை, ஆக்ஷன் கலந்து சொல்லியிருப்பது அழகு. படத்திற்கு மிகப்பெரிய பலமே வசனங்கள்தான். ஒவ்வொரு வசனங்களும் ரசிகர்களின் கைதட்டல்களிலும், விசில்களிலும் அனல் பறக்கிறது.நேர்த்தியான திரைக்கதை படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. முதல் பாதி சாரு மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதி சூடு பிடித்து விறுவிறுப்பாக செல்கிறது.தமன் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கெனவே ஹிட்! தாளம் போட வைக்கிறது.சில இடங்களில் வரும் பழைய காட்சி அமைப்புக்களை தவிர்த்திருந்தால் சூப்பர் ஹிட் அடித்திருக்கும்! தமன் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கெனவே ஹிட்டாகியிருந்தாலும், படத்தில் பார்க்கும்போது இன்னும் அழகாக இருக்கிறது. ‘ஓ மை டார்லிங்’ பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. சிம்பு எம்.ஜி.ஆர்., ரஜினி, அஜித் கெட்டப்பில் வரும் தாறுமாறு பாடல் ஆட்டம் போட வைப்பது மட்டுமில்லாமல் ரசிக்கவும் வைக்கிறது. பின்னணி இசையும் அசத்தல். சக்தியின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சியாக அமைந்துள்ளது. மொத்தத்தில் வாலு சிம்புவின் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது