மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்ககை வரலாறு படம் வெளியாகி பெரும் வரவேற்புக்குள்ளானது. இதையடுத்து தமிழ் சினிமாவில் தற்போது மறைந்த முக்கிய தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு படங்களாக எடுக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையும் படமாக உருவாக இருக்கிறது. இந்தப் படத்தை ஸ்டூடியோ 18 என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் நடிகர் பாபி சிம்ஹா, மாவீரன் பிரபாகரனாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ‘சீறும் புலிகள்’ என தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தை மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்த ஜி.வெங்கடேஷ் குமார் இயக்குகிறார். இப்படம் குறித்து ஜி.வெங்கடேஷ் குமார் கூறியதாவது,கடந்த 6 மாதங்களில் பல முறை பழ.நெடுமாறன் ஐயா அவரை சந்தித்தேன் ஒவ்வொரு சந்திப்பிலும் எனக்கான சில மணி நேரங்களை ஒதுக்கி தமிழ் தேசிய தலைவரின் வாழ்க்கை வரலாற்றை நான் வடிவமைக்க உறுதுணையாக இருந்தார். நெடுமாறன் ஐயாவின் புத்தகத்தை படித்ததோடு அவரிடம் நேரில் நான் கேட்டுக் கொண்ட சம்பவங்களே இந்த கதைக்கருவை உருவாக்குவதில் துணைநின்றன சீறும் புலி எழுச்சியின் வடிவம் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.