அட்டகத்தி ,மெட்ராஸ் என தன் முதல் இரண்டு படைப்புகளிலேயே அனைவரது பார்வையையும் தன் பக்கம் ஈர்த்த இளம் இயக்குனர் பா.ரஞ்சித் அடுத்து ரஜினிகாந்தை இயக்குகிறார்.என்ற செய்தியே பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.இப்படத்தை வி.கிரியேசன்ஸ் படநிறுவனம் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார் என்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் ,இதில் சர்ச்சைநாயகி ராதிகாஆப்தேவும் நடிக்கிறார் என்பதில் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இதன் படத்தலைப்புகள் குறித்து பல்வேறு பெயர்கள் வெளியாகியுள்ளது.காளி,.கண்ணபிரான்,ருத்ரா,ஈஸ்வரன்,முனீஸ்வரன் கபாலீஸ்வரன் ஆகிய பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்ததாகவும் ,இதில் ரஜினியின் கேரக்டர் பெயர் கபாலிஸ்வரன் என்பதால் கபாலி என்ற பெயரே இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.பல வருடங்களுக்கு முன்பு சென்னை மைலாப்பூரில் வாழ்ந்து வந்த கபாலி அப்பகுதியில் உள்ளவர்களுக்கு ராபின்ஹூட் பாணியில் உதவி வந்ததாகவும் பின்னர் மலேசியா சென்று மிகப்பெரிய கடத்தல்மன்னனாக உருவெடுத்தாகவும் அப்பகுதி மக்களால் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. எனவே, இது கபாலி தாதாவின் வாழ்க்கையை சித்தரிக்கும் படமாக இருக்கலாம் என்கிறார்கள்.