இசைஞானியின் சங்கீத சாம்ராஜ்யத்தில் முக்கியமான அங்கமாக திகழ்ந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
உடன் பிறப்பான கங்கை அமரனுக்கு கத்திரி போட்டு வெட்டிய கைகள் பாலசுப்பிரமணியத்தை மட்டும் விட்டு வைக்குமா என்ன?
டைனமைட் வைத்து நட்பு பிளக்கப்பட்டது.
அதைப் பற்றி அவர்கள் இருவருமே கவலைப்படவில்லை.
எனது இசை என்னுடன்.உனது வாய்ஸ் உன்னுடன்!
“பூங்காற்று திரும்புமா?”
சென்னையில் நடக்கும் ‘இளையராஜா 7 5 ‘ நிகழ்ச்சியிலேயே அது நடக்கவில்லை என்கிறபோது மறு வாய்ப்புக்கு இடமேது?
தமிழ்ச்சினிமா வரலாற்றில் இந்த ஜாம்பவான்களை தவிர்த்து அத்தியாயம் எழுத முடியாது.
அப்படி முனைந்தால் அது சங்கீத அன்னைக்கு செய்கிற துரோகம்.!
அமிர்தம் கொடுத்த முலையை அறுத்து எறியக்கூடிய துரோகி இன்னும் பிறக்கவில்லை என்றே நம்புவோம்.
இனி விஷயத்துக்கு வருவோம்.
விழாக்களுக்கு வருகிற நடிகைகள் எப்படியெல்லாம் உடைகள் அணிந்து கொண்டு வருகிறார்கள் என்பதைப் பற்றிய பாலுவின் பார்வை இனி….!
“தற்போதைய ஹீரோயின்களுக்கு அவர்கள் சார்ந்த திரைப்பட விழாக்களுக்கு எப்படிப்பட்ட ஆடைகள் அணிந்து வருவது என்பது தெரியவில்லை! விழாவுக்கு வருகிற ஹீரோக்கள், தயாரிப்பாளர்களை கவர்ந்தால் போதும் என்று நினைத்து கவர்ச்சியாக வந்து விடுகிறார்கள். இது இன்னசன்சா,அல்லது குளோபளைசெஷனா?
இதெல்லாம் அவர்களுக்கு தெரியாது!
என்னுடைய இந்த கருத்தில் அவர்களுக்கு உடன்பாடில்லை என்றால் அதைப்பற்றிய கவலை எனக்கில்லை.!
நான் சொன்னதை புரிந்து கொள்ளும் அளவுக்கு அவர்கள் புத்திசாலிகள் இல்லை.” என்கிறார் பாலு.
மேடம்ஸ்! யாருக்காவது அப்ஜெக்சன் இருக்கா?