சிறு ஊற்றாக உருவாகும் ஓடை ஓடி ஓடி ஓசை மிகுந்து ஆறாக மாறி அருவியாக கொட்டும்போது …..
அதன் ஆற்றல் அளப்பரியதாக இருப்பதில்லையா ….
அதைப்போலத்தானோ இசைப்புயல் ரகுமானும்..!
நாளை அரசியலும் பேசலாம்.
யூ டியூப் பில் அவரது பேட்டி பலரது விழிகளை அகல விரித்திருக்கும்.!
“ஒருவரின் சாதி ,மதம் வைத்து அவர்களை ஒதுக்குதல் கூடாது.
ஒதுக்கினாலும் நீ ஒடுங்கி விடக்கூடாது.
எனக்கு இந்த விஷயத்தில் எடுத்துக்காட்டாக இருப்பவர் இளையராஜா சார்தான்!அவர் எங்கிருந்து வாழ்க்கையைத் தொடங்கி இன்று அவர் தொட்டிருக்கிற உயரமே உதாரணம்தான்!
உன்னை அமுக்கினால் நீ மீண்டு வர வேண்டும்.எத்தனை வருடமாக இருந்தால் என்ன போராடு!
வெற்றி பெற்ற பின்னர் யாரும் பேச மாட்டார்கள்”என்கிறார் ரகுமான்.