தி.நகரில் திடீர் பிள்ளையார் முளைத்த மாதிரி…
இன்று பனியின் அடர்த்தி அதிகமாவதற்குள் டிவிட்டரில் பார்த்தீபனின் பதிவு அனல் அடித்தது.
ஆயிரம் அர்த்தங்கள்.!
ஒரு பக்கம் சில ஊடகங்கள் பதவி விலகல் என அச்சுகளைத் தட்ட மறுபக்கம் டிவிட்டரில் பார்த்தியின் ஞானோபதேசம்.
அது எதைக் குறித்து?
“சுயம் பாதிக்கப்படும்போது சோறு மூன்றாம் பட்சமே!”
இதை அடுத்து சற்று விளக்கமாக “ஹெமிங்க்வே சொல்வதாக ஒன் வே ஆகவே இருக்கும்.அன்பும் நட்பும் நாமும் ஸ்பெஷல் என்பது மறந்து போய் சுயம் பாதிக்கப்படும்போது சங்கம்,சமூகம் என்பதெல்லாம் மூன்றாம் பட்சமே”!
ஐயா ,உங்களை உலகநாயகன் ரொம்பவே பாதித்திருக்கிறார்.
நீங்கள் பதவியில் இருக்கிறீர்களா,இல்லையா?
இசைஞானியின் விழா முடிந்த பின்னர் விலகல் கடிதம் ஒப்புக்கொள்ளப்படும்?