வெளிநாட்டு மருமகள் என்கிற பட்டியலில் இணைகிறவர்கள் பட்டியலில் இவரது பெயரும் இருக்கிறது.
சினிமாவில் இனி நடிப்பாரா என்கிற சந்தேகம் கிளை விட்டு கொடியாய் படர்ந்து நிற்கிறபோது….இப்படி ஒரு செய்தி.!
ஸ்ருதிஹாசன் நடிக்க வருகிறார்.!
சங்கமித்ரா என்கிற படத்திற்காக வெளிநாடு சென்று வித்தைகள் கற்றவர். அந்த படத்தின் விதி முடிந்து விட்டது என்றதும் இனி நடிப்பதில்லை என முடிவுக்கு வந்தாரோ என்னவோ!
தற்போது இயக்குநர் ஜனநாதனின் படத்தில் நடிக்கப்போவதாக செய்திகள்.! சமூகப் பார்வையுடன் கதை இருக்கும் என்பதால் அந்தப் படத்தில் விஜய சேதுபதி நடிக்கிறார்.இணையாக ஸ்ருதி என்கிறார்கள். நல்ல சேதி!