சிவகார்த்திகேயனுடன் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்த நடிகை ரெஜினாகஸாண்ட்ரா. தொடர்ந்து மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், மிஸ்டர் சந்திரமௌலி,சிலுக்குவார்பட்டி சிங்கம், ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது எஸ்.ஜே சூர்யாவுடன்,நெஞ்சம் மறப்பதில்லை, வெங்கட்பிரபுவின் பார்ட்டி ஆகிய படங்களில் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக நடித்து வருகிறார்.இந்நிலையில் , ரெஜினாகஸாண்ட்ரா தற்போது ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.இது திரையுலகினர் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“எனக்கு ஓரினச் சேர்க்கை நண்பர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். நாம் அவர்களை புரிந்துகொண்டு, ஒப்புக்கொள்ளவேண்டும். ஆனால் பலரும் கலாச்சாரம்-ஒழுக்கம் என கூறி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மேலும் பொது இடங்களில் யாராவது நெருக்கமாக இருந்தால் அல்லது முத்தம் கொடுத்தால் அதற்கும் கடும் எதிர்ப்பு வருகிறது,அவங்கவங்க சுதந்திரம் என ஓன்று இருக்கிறதல்லவா, மக்களும் இதை புரிந்து கொண்டு மாற வேண்டும் ” என அவர் கூறியுள்ளார்.ரெஜினா ‘ஏக் லட்கி கோ தேகா தோ ஐசா லகா’ என்கிற இ ந்தி படத்தில் ஓரினச் சேர்க்கை தோழியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.