இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்ட வம்சங்களில் துக்ளக் வம்சமும் ஒன்று. துருக்கியர்கள் வழி வந்த சன்னி இசுலாமிய மரபினர்.
இவர்களில் முகமது -பின்-துக்ளக் என்பவர் சரித்திர ஆசிரியர்களால் மூட துக்ளக் என எள்ளி நகையாடப்பட்டார்.
தலைநகரை டெல்லியில் இருந்து தேவகிரிக்கும் ,பின்னர் டெல்லிக்குமாக மாற்றிக் கொண்டார். முன்னுக்குப்பின் முரண் என செயல்பட்டவர்.
இவரை மையமாக வைத்துத் தான் நடிகர் சோ ராமசாமி நாடகம் நடத்தி வந்தார்.பின்னாட்களில் அதுவே அரசியல் சட்டையர் படமாகியது.
7ஸ்கிரீன் ஸ்டுடியோவின் சார்பில் டெல்லி பிரசாத் இயக்கத்தில் ‘துக்ளக் ‘திரைப்படமாகிறது. தற்கால அரசியல் தாறுமாறாகிக் கிடப்பதை நையாண்டி செய்யப்போகிறார்களாம்.
மக்கள் செல்வன் விஜய்சேதுபதிதான் படத்தின் நாயகன்.. 96 படத்தின் தமிழ்நாடு உரிமையை வாங்கி தக்க சமயத்தில் பேருதவியாக இருந்த லலித் என்பவருக்கு மக்கள் செல்வன் செய்யும் நன்றிக்கடன் .