சிம்புவை பற்றி நான் ஏதும் கூறவில்லை – ஸ்ரீகாந்த்
நடிகர் சிம்புவை பற்றி டுவிட்டர் இணையத்தில், நடிகர் ஸ்ரீகாந்த் என்ற கணக்கில் இருந்து நீங்க அஜித் ரசிகனா இருக்கிறது நல்ல விஷயம் தான்.ஆனால் அவருடைய இமேஜை பயன்படுத்தி கைதட்டல் வாங்குவது நல்ல விஷயம் இல்லை!நீங்க உங்க திறமையை நிரூபியுங்கள் .சாரி…!என்பது போன்ற சில பதிவுகள் 15 ந்தேதி அன்று வெளியானது.. இது பற்றி இன்று நடிகர் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் “டுவிட்டர் இணையத்தில் ஸ்ரீகாந்த் என்று என் பெயரில் வரும் கருத்துகள் அனைத்தும் போலியானவை. நான் இதுவரை டுவிட்டர் தளத்தில் எந்தவொரு கணக்கினையும் வைக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன். யாரோ சில விஷமிகள் என்னுடைய பெயரை தவறாக பயன் படுத்தி வருகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும். சிம்பு என் நெருங்கிய நண்பர்களில் ஒருவர்.அஜித், சிம்புவின் ரசிகர்களை பற்றி எந்தவொரு விமர்சனத்தையும் நான் அளிக்கவில்லை. என் பெயரில் போலியாக கணக்கினை வைத்திருப்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக் கூறியுள்ளார். டிவிட்டரில் இது போன்ற சில வில்லங்கமான விசயங்கள் பதிவாகும்போது சம்பந்தப்பட்டவர்கள் இது போல் மறுப்பது வாடிக்கை தான் இவாளவு நாள் ஸ்ரீகாந்த் என்ன செய்து கொண்டிருந்தார்.என்கிறது கோலிவுட்? இந்தகனக்கில் சில திரையுலக புள்ளிகள் பாலோயர்ஸ் ஆக இருப்பதும் குறிப்பிடத்தக்கது! ”Srikanth K @actor_srikanth 17h17 hours ago
Being an Ajith sir fan is good but using his image, reference to get mass response plus claps is annoying, Earn your own #STR sorry.
RETWEETS
832
FAVORITES
848