நடிகரும் இயக்குநருமான தியாகராஜன் தயாரிப்பில், , பிரசாந்த் ,நர்கிஸ் பக்ரி ,தம்பிராமையா ,நளினி ,அபிதா. நாசர்., துளசி. லீமா., தம்பி ராமையா, எஸ்.எஸ்.பாஸ்கர்,தேவதர்ஷினி, மலேசியா அபிதா, ஸ்வாமிநாதன், சோனு சூது,கோட்டா சீனிவாசராவ், ராவ் ரமேஷ் உள்பட பலர் நடித்து வரும் புதியபடம் ‘சாஹசம்’.இப்படதிற்காக இசையமைப்பாளர் தமன் கடந்த 6 மாதங்களாக இசை கோர்ப்பு செய்து 5 அருமையான பாடல்களை பதிவு செய்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் பாடல்களை ஆண்ட்ரியா, லட்சுமி மேனன், ஸ்ரேயா கோஷல், ஹனி சிங், சங்கர் மகாதேவன் ஆகியோர் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.. நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளரான தியாகராஜன் மோஹித் சவ்ஹானை பெரிய முயற்சிக்குப்பின் சாஹசம் படத்தில் பாட வைத்துள்ளார். கவிஞர் நா.முத்துகுமார் எழுதிய பெண்ணே பெண்ணே… குட்டிப் பெண்ணே ஆங்கிரி பேர்ட் பெண்ணே… சும்மா சீனு வேணா(ம்) கண்ணே, உங்க நைனா போட்ட சோத்தில்.. காரம் ரொம்போ… குல்பி வாங்கித்தாரேன் கண்ணே.. என்ற வரிகளை மோஹித் சவ்ஹான் தனது மயக்கும் குரலில் பாடி அசத்தினார். இப்பாடலை மும்பையில் பதிவு செய்தனர். மோஹித் சவ்ஹான் ஏற்கனவே அனிருத் இசையில் 3 படத்திற்காக பாடிய, போ நீ போ… என்ற பாடல் மிகப்பெரிய வெற்றி அடைந்து, சிறந்த பாடகருக்கான விஜய் விருதையும் அவருக்கு பெற்று தந்தது குறிப்பிடதக்கது.