தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை இரண்டு மாத காலகட்டத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் எனவும்,ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை தேர்தல் அதிகாரியாக நியமித்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தல் தேதி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதையடுத்து நடிகர் சங்கத்தின் தற்போதைய தலைவர் சரத்குமார் தலைமையிலான ஒரு அணியும்,நாசர்,விஷால் தலைமையிலான ஒரு அணியும் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு நடிகர்கள் நாசர்,விஷால்,கார்த்தி, கருணாஸ்,பொன்வண்ணன்,ஜே.கே.ரித்திஷ் ஆகியோர் சென்றனர். அவர்களை வீட்டு வாசலுக்கே வந்து நடிகர் ரஜினிகாந்த் அழைத்துச் சென்றார்.தொடர்ந்து நடிகர் சங்க விவகாரங்களை அவர்களிடம் கூர்ந்த கேட்ட ரஜினிகாந்த், தேர்தல் அன்று எங்கிருந்தாலும் வந்து வாக்களிப்பேன் என உறுதியளித்தாராம்.இதையடுத்து, தூங்காவனம் படபிடிப்பில் இருந்த நடிகர் கமல்ஹாசனை சந்தித்தும் ஆதரவு திரட்டினர். குஷ்பூவும் உடன் இருந்தார்.