கரை சேரும் நேரத்தில் கப்பல் உடைபட்டால் என்னவாகும்?
பள்ளியறைக்குள் ஆசையுடன் சென்ற புது மாப்பிள்ளைக்கு அந்த பெண் இன்னும் ஆளாகவே இல்லை. அவசரப்பட்டு கல்யாணம் செய்து கொடுத்து ஏமாற்றிவிட்டார்கள் என்பது தெரிகிறபோது நொறுங்கிப் போக மாட்டானா ?
அப்படித்தான் ஆகி விட்டது சீயான் விக்ரமின் கணக்கு!
தனது வாரிசு துருவ் தன்னைவிட புகழ் பெற வேண்டும் என ஆசைப்பட்டார்.
ஒவ்வொரு தந்தையின் கனவு அதுதானே!
இயக்குநர் பாலா மீது எல்லோருக்குமே ஒரு நம்பிக்கை உண்டு.பாலு மகேந்திராவின் பட்டறையில் பயின்றவர்.
அந்த நம்பிக்கையோடு மகன் துருவ்வை ஒப்படைத்தார்.
வர்மா’என பெயரிட்ட அந்தப்படம் வளர்ந்தது.ஆனால் அரை குறையான வளர்ச்சியில்.!
தெலுங்கில் சக்கைப்போடு போட்ட அந்தப் படத்தை ரீமேக் பண்ணினார் பாலா.
பலன் வேறு விதமாகி விட்டது. பார்த்தவர்கள் தேறாது என்று சொல்ல விக்ரம் உடைந்து போனார்.
இதனால் கடந்த பத்து நாளாக பஞ்சாயத்து.
பலன் இல்லை.
கடைசியில் வர்மாவை வெளியிடப்போவதில்லைஎன்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்
வேறு ஒருவரை வைத்து புதிதாக படம் பண்ணப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்,
இயக்குநரை மாற்றி விட்டார்கள்.