நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா,விசாகன் ஆகியோரது இரண்டாவது திருமணம் வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி போயஸ் தோட்டத்தில் அமைந் துள்ள, நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் தான் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் இவர்களுடைய திருமணம் வீட்டில் நடைபெற உள்ளதால், ரஜினிகாந்த் மற்றும் தொழிலதிபர் வணங்காமுடிக்கு நெருங்கிய சொந்த பந்தங்கள் , நண்பர்கள் மற்றும் குறிப்பிட்ட பிரபலங்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திருமணத்திற்கு இன்னும் சில தினங்களே உள்ளதால், திருமண வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.வரும் 11 ந்தேதி இவர்களதுதிருமணவரவேற்பு சென்னை நட்சத்திர ஓட்டலில் நடக்கவுள்ளது.