ரஜினி-ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ‘கபாலி’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இப்படத்தின் தலைப்பு தனக்கு சொந்தமானது என்றும் புதுமுகங்கள் நடிக்கும் அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கூட சமீபத்தில்தான் முடிந்ததாக மைசூரைச் சேர்ந்த சிவக்குமார்என்பவர் கூறியுள்ளாராம்..இதற்கு விளக்கம் அளித்த தயாரிப்பாளர் தாணு ‘எங்கள் படத்துக்கு கபாலி என்று பெயர் வைக்கலாம் என்று முடிவு செய்தவுடன், தயாரிப்பாளர்கள் சங்கம், சேம்பர், கில்டு ஆகிய எல்லா இடங்களிலும் விசாரித்துப்பார்த்தோம், ஓப்பனாகத்தான் இருந்தது. அதனால் நாங்கள் வைத்துவிட்டோம்.அதன் பின்னர்தான் இப்படி ஒருபடம் இருப்பது தெரியவந்தது. ஆனால் இதுவரை அந்தப்படம் சம்பந்தப்பட்ட யாரும் எங்களைத் தொடர்புகொள்ளவில்லை என்றாலும் இப்படி நடந்தது வருத்தத்துக்குரிய தருணம் தான்’ என்றும் கூறியுள்ளாராம். மேலும், இந்த பிரச்சனை குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் பேசி தீர்க்கப்பட்டு விடும் என்றும் ,தெரிவிக்கப்பட்டுள்ளது.ரஜினி – ரஞ்சித் இணையும் கபாலி படத்தின் பெயர் நேற்று வெளியான சில நிமிடங்களிலேயே உலகளவில் ட்விட்டரில் ‘டிரென்ட்’ ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.