எத்தனையோ ஆண்டுகள் இணைபிரியாமல் இருந்த இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆகியோரின் நட்பு ராயல்டி பிரச்னையில் பட் படாரென வெடித்து துருவங்களாகிப் போச்சு.
முரட்டுக்காளையாக பாலு ,முரட்டு சாமியாக ஞானி .
இவர்களை சேர்த்து வைக்க எந்த ஒரு கீசிங்கராலும் முடியாது போலிருக்கு.
அப்படி இருக்க சில நடிகைகள்’பாலு ,மன்னிப்புக் கேள் ‘என்று போராடத் தொடங்கி இருக்கிறார்கள்.
“சான்ஸ் பிடிப்பதற்காக நடிகைகள் ஆபாசமாக உடைகள் அணிந்து கொண்டு விழாக்களுக்கு வருகிறார்கள்.இதுதான் கலாச்சாரத்தை காப்பாற்றும் லட்சணமா?”என்று கேட்டு விட்டார்.
சிலர் முண்டா பனியன் மாதிரி கவுன் போட்டுக்கொண்டுவருகிறார்கள்,டாப் ஆங்கிள் போட்டோ எடுக்க போட்டோ கிராபர்கள் படும் பாடு நமக்குத்தான் தெரியும்.
“எங்களைப் பார்த்து எப்படி பாலு சொல்லலாம்.அவரை பாடுவதற்கு கூப்பிடாதிங்க”என்று சீனியர் நடிகைகள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
என்னடா இது கவர்ச்சிக்கு வந்த சோதனை!