சின்னத்திரையில் பணி புரியும் உதவி இயக்குநர்களுக்கு உரிய சம்பளத்தை பெற்றுத்தர, சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் சார்பாக இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத அறவழிப் போராட்டம் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் தொடங்கியுள்ளது.
காலை 9 மணிக்கு தொடங்கிய இப்போராட்டம் மாலை 5 மணி வரை நடக்கிறது.இப்போராட்டத்தை இயக்குனர்,நடிகர் கே . பாக்யராஜ் துவக்கி வைத்தார்.இப்போராட்டத்தில் ஏராளமான உதவி இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.