சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் சென்னைக்குத் திரும்பிய பின்னர்தான் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும்.
அதற்கு முன்னதாக வருகிற கூட்டணி பற்றிய செய்திகள் தவறானவை என்கிறார்கள்.
இது பற்றி கட்சியின் முக்கிய பிரமுகரான எல்.கே.சுதீஷ் “இன்னும் மூன்று வாரங்களில் கேப்டன் சென்னை திரும்பி விடுவார்.அதன் பின்னர்தான் யாருடன் கூட்டணி என்பது முடிவு செய்யப்படும் .தற்போது கேப்டன் நலமுடன் இருக்கிறார்.”என்கிறார்.