ஜீரோ சைஸ் படத்துக்காக தன் உடம்பை டபிள் மடங்காக பெருக்கியவர் அனுஷ்கா .யோகா மாஸ்டரும் ஆவார்.
பெருத்த உடம்பை இளைக்க வைப்பது எளிது என்று இவர் போட்ட கணக்குப் பொய்யாகிப் போனது.
பாகுபலி வெற்றி, பட வாய்ப்புகளை அழைத்து வந்தாலும் யானை சைஸ் உடம்பு முட்டுக்கட்டையாகியது.
நொந்து போய் விட்டார்.
எவ்வளவோ முயற்சி! எங்கெங்கோ பயணம்.
பலன் தரவில்லை.
ஆனால் தற்போது முன்னைப் போல இளமை, அழகு, உடல் எல்லாமே திரும்பி வந்திருக்கிறது.
கூடவே இவரைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போகிறார் என ஒரு டாட்டூஸ் ஆளையும் காட்டுகிறார்கள்.
உடம்பெல்லாம் பச்சை குத்திக் கொண்டிருக்கிற அவர் பெயர் லியூக் .
சத்துணவு ஆலோசகர். இவரது ஆலோசனையின் பேரில்தான் உடல் இளைத்திருக்கிறார் அனுஷ்கா. மற்றபடி மாப்பிள்ளை இல்லை.!