“மிஸ்டர் மிஸ்கின் ! இவரைத் தவிர அந்தப் படத்தை வேறு யாருக்கும் பண்ணக்கூடாது” என்று சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவு போட்டிருந்தது.
‘சைக்கோ ‘படத்தை மைத்ரேயனுக்கு பண்ணிக் கொடுப்பதாக சொல்லி சில கோடிகளை வாங்கி மிஸ்கின் ஏமாற்றி விட்டதாக சொல்லித் தொடரப் பட்ட வழக்கில்தான் அப்படி ஒரு தீர்ப்பு.
ஆனால் அந்த பெயரில் உதயநிதி ஸ்டாலின் படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
உயர்நீதி மன்றம் உத்திரவு போட்டிருப்பது அவருக்கு தெரியாதா?
“அந்த தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வந்து அந்த கதையைச் சொன்னார்கள் . அந்த கதையை பல வருடங்களுக்கு முன்னதாகவே என்னிடம் மிஸ்கின் சொல்லிவிட்டதை சொன்னேன்.
மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளர் நான் இல்லை .என்னால் எந்த முடிவும் எடுக்க முடியாது. மிஸ்கினிடமும் சொல்லி விட்டேன். அவர் சட்டப்படி பார்த்துக் கொள்வதாக சொல்லிவிட்டார். பெரும் பகுதி ஷூட்டிங் முடிந்து விட்டது. இன்னும் இரண்டு வார வேலைதான் பாக்கி “என்கிறார் உதயநிதி ,