“பூமியைத் தாய்க்கும் வானத்தை தந்தைக்கும் ஒப்பிடும் நாம் தாரத்தை எதற்கு ஒப்பிடலாம் ?” என ஒரு கேள்வி.
அதற்கு அந்த காலத்தில் உலகநாயகன் கமல் சொன்ன பதில் “மேகத்திற்கும் மழைக்கும் ஒப்பிடலாமோ?” என்பது.
ஆனால் சொந்த வாழ்க்கையில் அவருக்கு தாரம் என்பது இடியாக அமைந்திருந்தது என்பது எனது கருத்து..
“காற்றின் அர்த்தத்தை வியர்த்தவன் சொர்க்கம் என்பான்.நனைந்தவன் நரகமென்பான்”என்பது காதலைப் பற்றி கமல்ஹாசனின் அன்றைய கருத்தாக இருந்தது.
இன்று மாறி இருக்கலாம் .
அது எதுவாக இருந்தால் என்ன,அடிபட்டவனுக்கு மட்டும்தான் வலி தெரியும்!
சரிகாவின் வாக்குமூலத்தை தொடரலாம்.!
“டிடெக்டிவ் ஏஜென்சி எதற்காகத் தெரியுமா? கட்டிய கணவனைக் கண்காணிப்பதற்காக.!
கமல்ஜி எங்கு போகிறார்,என்ன செய்கிறார் என்பதை பற்றிய தகவல்களை பெறுவதற்காக வாணி செய்திருந்த ஏற்பாடு.
ஜெயா பச்சன் உள்ளிட்ட பலரிடம் எங்களின் விவகாரம் பற்றி சொல்லிவைத்தார்.
கமல்ஜி படப்பிடிப்பில் இருந்து ஓட்டலுக்கு திரும்புகிற போது அவர்களில் யாராவது ஒருவர் கமல்ஜியை சந்தித்து “வைரம் போல மனைவி இருக்கிறபோது எதற்கு இன்னொருத்தியை காதலிக்கிறீர்கள். இது முட்டாள்த்தனமாக இல்லியா?” என்று அவர்கள் புத்திமதி சொல்ல ஏற்பாடு.
இதுமட்டுமல்ல.!
சென்னையில் கமல்ஜியுடன் பழகிய சில பெண்களை பம்பாய்க்கு அனுப்பி வைத்தார்.
அவரோடு பழகி மயக்கி உறவு கொண்டாடினாலும் பரவாயில்லை .
சரிகாவை விட்டு விலகி சென்னைக்கு அழைத்து வந்து விடுங்கள் இங்கே நமக்குள் அட் ஜஸ்ட் பண்ணிக்கொள்ளலாம் என்பது வாணியின் ஏற்பாடு.
எந்த மனைவியாவது இப்படி தன் கணவனை ஒரு வியாபார பொருளாக நினைப்பாளா?
இத்தனை கொடுமைகளையும் தாங்கிக்கொண்டு கமல்ஜியும் நானும் பல மாதம் ஒருவரை ஒருவர் சந்திக்காமல் பிரிந்தே இருந்தோம்.
ஆனால் கமல்ஜி சென்னை திரும்பிய பிறகும் நிறைய கொடுமைகளை அனுபவித்திருக்கிறார்.
கமல்ஜியுடன் வாணி பேசுவதில்லை.வீட்டில் யாரும் அவருக்கு உணவு பரிமாறுவது இல்லை.
எஜமானியின் உத்திரவுப்படி வேலைக்காரர்களும் அவரை அவமதித்தார்கள்.
படுக்கையை விரித்துக்கொள்வது,டீ தயாரிப்பது, ஆடைகளை சரிபார்த்துக் கொள்வது போன்றவற்றையும் கமல்ஜியே செய்து கொள்ள வேண்டுமாம். சொந்த வீட்டிலேயே இப்படியொரு கொடுமை!
ஒரு முறை ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக வீட்டுக்கு ஆடை மாற்ற சென்றபோது கதவை பூட்டி வைத்து விட்டார்.இரண்டு மணி நேரம் கமல்ஜி வெளியேயே காத்திருந்திருக்கிறார்.
கமல்ஜிக்கு பாரம்பரியமான சொந்த வீட்டிலேயே இத்தனை அவமதிப்புகளை அவர் சந்தித்ததை அறிந்து என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அழுது குமுறுவதைத் தவிர வேற என்ன செய்ய முடியும்?
வாணிக்குப் போன் செய்து பேசினேன்.
“கமல்ஜியை விட்டுப் பிரிந்து விடுகிறேன்.இதை உறுதியாக சொல்கிறேன்.தயவு செய்து அவரை அவமரியாதையாக நடத்தாதே “என்று சொன்னேன்.
அதற்கு வாணி மிகவும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி வேசி ,எனக்கு புத்தி சொல்கிறாயா,என் அந்தஸ்து என்ன ,உன் அந்தஸ்து என்ன,எனக்கு புத்திமதி சொல்ல நீ யாரடி?என்றெல்லாம் திட்டி போனை துண்டித்து விட்டார்.
அவர் எப்போதும் அப்படித்தான் நடந்து கொள்வார். வாணி விரும்பி இருந்தால் எங்கள்
உ றவைத் தவிர்த்து விட்டு அவருக்கு உண்மையான மனைவியாக வாழ்ந்திருக்க முடியும். அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் எங்களை ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாக மாற்றியது.
பல மாதப் பிரிவுகள்.! கமல்ஜி மீண்டும் வந்து “இனி உன்னை பிரிந்து செல்ல மாட்டேன்.என்னை விட்டு பிரிய உன்னையும் விட்டு விட மாட்டேன் என்று கூறினார்.
வாணி செய்த பெரிய தவறு இந்த பிரச்னையை பெரிதாக்கி என்னிடம் வலு சண்டைக்கு வந்ததுதான்.
கமல்ஜியிடமே பேசி மனசை மாற்றி இருக்கலாம்..எந்த பெண்ணுமே தனது அந்தரங்கத்தை கணவனுடன் நிறுத்தக் கொள்ளவேண்டும் படுக்கை அறையில் நடப்பதை திறந்து ஊர் உலகத்துக்கு காட் டக்
கூடாது.
கணவனை மற்றவர் முன்னால் அவமதித்துவிட்டு வெளி உலகில் நல்லவளைப் போல நடிப்பதால் என்ன பலன்?
முதல் முறையாக நான் கர்ப்பம் தரித்தபோது கமல்ஜிக்கு பிரச்சினை ஆகி விடக்கூடாது என்பதற்காக அபார்ஷன் செய்து கொண்டேன். இதற்காக அவர் மிகவும் வருத்தப் பட்டார். இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்தபோது கமல்ஜியின் மனைவியாக வாழும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் சரி அந்த குழந்தையைபெற்று எடுக்க வேண்டும். கமல்ஜியின் அன்புக்கு நினைவாக அந்த குழந்தை எனக்கு நிச்சயம் வேண்டும் என்று நினைத்தேன்.
ஆனால் கமல்ஜி என்னிடம் சற்று கோபமுடன் “இப்படி ஒரு முட்டாள்த் தனமான யோசனையை சொன்னது யார்,நம் குழந்தையை நான் என் குழந்தை என்று உரிமை கொண்டாடுவதை நீ எப்படி தடுக்கலாம் “என்று கோபித்துக் கொண்டார்.
நான் அடைந்த மகிழ்சசிக்கு அளவே இல்லை. திருமணம் என்கிற பந்தம் இல்லாமல் தான் நான் ஸ்ருதியை பெற்றேன்.
இரண்டாவது குழந்தை பிறந்த பிறகே திருமணம் பற்றி நான் தீர்மானித்தேன்”என்கிறார் சரிகா.
அந்த திருமணம் நடிகர் திலகம் முன்னிலையில் அன்னை இல்லத்திலேயே நடந்தது.
அதை பற்றிய விவரத்தை நாளை மறுநாள் பார்க்கலாம்.
–தேவிமணி