மத்திய அரசின் மெத்தனம் அல்லது கவனமின்மை இதில் ஏதோ ஒன்று, நமது எல்லைகளில் பாக்.பயங்கரவாதத்தின் அத்துமீறல் அடிக்கடி நடப்பதற்கு காரணமாக இருக்கிறது.
பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணங்களிலும் பிரமாண்ட சிலை திறப்பதிலும் கவனமாக இருக்கிறார் .
நாட்டு எல்லையைப் பயங்கரவாதிகள் மெல்ல மெல்ல அரித்துக் கொண்டிருக்கிறார்கள். உச்ச கட்டமாக புல்வமா தாக்குதல். 40 க்கு மேற்பட்ட நமது சி.ஆர்.பி.எப் . படை வீரர்கள் வீர மரணம் அடைந்திருக்கிறார்கள்.
இதை வன்மையாக கண்டித்திருக்கிறார் சூர்யா .
“புல்வமாவில் நமது இந்திய வீரர்கள் மீது பாக்.பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது.தாக்குதலில் உயிர் நீத்த வீரர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.”என சொல்லி இருக்கிறார்.
ஆனால் அரசியல் வட் டத்துக்குள் வந்திருக்கிற சிலர் இதைப்பற்றி எவ்விதமான கருத்துகளும் சொல்லவில்லை.
இவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக நாளை வரப்போகிறவர்கள்.அவர்களுக்கு நாட்டு நலன் பற்றிய அக்கறை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம் அல்லவா ?.