காஷ்மீர் மாநிலத்தில் மத்திய ஆயுதப்படை போலீசார்) 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறை முடிந்து, நேற்று அதிகாலை 3.30 மணிக்கு ஜம்முவில் இருந்து 78 வாகனங்களில் பள்ளத்தாக்கு பகுதிக்கு பாதுகாப்புக்கு கவச வாகனங்கள் உடன் திரும்பிக்கொண்டிருந்தனர். ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புல்வாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது ,திடீரென தீவிரவாதி ஒருவன், ஏராளமான வெடிகுண்டுகளை நிரப்பிய சொகுசு காரை துணை ராணுவ வீரர்கள் சென்ற பஸ்களில் ஒன்றின் மீது மோதியதில்,பலத்த சத்தத்தோடு வெடித்து சிதறியது. இதில் துணை ராணுவ படையினர் 44 பேர் பலியாகி உள்ளனர்.இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிற மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்று உள்ளனர்.இந்தியா முழுவதும் இக் கொடூர தாக்குதல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்திய அரசியல் தலைவர்கள் பலரும் இச் செயலுக்கு கடும் எதிர்ப்பும் , கண்டனமும் தெரிவித்து உள்ளனர்.இந்நிலையில்,நடிகர் ரஜினிகாந்த் இச் சம்பவத்தை கண்டித்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,