சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ திரைப்படத்தை அவருடைய இளையமகள் செளந்தர்யா இயக்கியதை அடுத்து, ரஜினிகாந்த் அடுத்து மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷின் இயக்கத்திலும் ஒரு படம் நடிக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ‘3’ படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா தனுஷ் தற்போது ‘வை ராஜா வை’ படத்தை இயக்கி முடித்துள்ளார் . இப் படத்தின்வெளியீட்டுக்கு க்கு பின்னர் , தனது அடுத்த படத்தை தந்தை ரஜினியை வைத்து இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை இதற்கு ரஜினி ஒப்புக்கொண்டால் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.’வை ராஜா வை’ படம் வரும் ஜனவரி இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டாப்சி, டேனியல் பாலாஜி, மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.