இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் தனது தந்தை, தாய் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்!
இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர்-உஷா தம்பதியினருக்கு சிலம்பரசன், குறளரசன் என்ற இரண்டு மகன்களும்,இலக்கியா என்ற மகளும் உள்ளனர். நடிகர் சிலம்பரசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், இயக்குநராகவும், இசையமைப்பாளராகவும் உள்ளார்.
அவரது இரண்டாவது மகன் குறளரசன் இது நம்ம ஆளு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். சிலம்பரசனின் சகோதரி இலக்கியாவுக்கு திருமணமாகிவிட்டது.அவர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியுள்ளார்.இந்தநிலையில் தனது பெற்றோர் முன்னிலையில் குறளரசன் இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளார்.சென்னை அண்ணாசாலை மெக்கா மசூதியில் அவர் இஸ்லாமிய முறைப்படி மதம் மாறுவதற்கான நிகழ்ச்சி நடந்தது. இதுகுறித்து டி.ராஜேந்தர் கூறியதாவது,“எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையை கடைபிடிப்பவன் நான். அதனால் குறளரசன் விருப்பத்திற்கு குறுக்கே நிற்க விரும்பவில்லை” என்றார். வீடியோ இணைப்பு கீழே,