இந்தியாவின் மத சார்பற்ற கொள்கைக்காக எல்லைகளையும் ,மக்களையும் காப்பாற்றி வருகிறவர்கள் அரசியல்வாதிகள் அல்லர்.
நமது பெருமை மிகுந்த ராணுவ வீரர்கள்தான் நம்மையும் நாட்டையும் காப்பாற்றி வருகிறார்கள்.
உள்ளூர் அரசியல்வாதிகள் இந்திய மக்களை சுரண்டிக் கொண்டிருப்பதைப்போல ,வெளிநாட்டு பயங்கரவாத சக்திகள் நமது எல்லைகளை கபளீகரம் செய்யப் பார்க்கின்றன.
பாகிஸ்தானுக்கு நமது காஷ்மீரத்தின் மீது பயங்கர ஆசை.எப்படியாவது கொள்ளை கொண்டு போக வேண்டும் என ஆண்டுக்கணக்கில் முயற்சித்து வருகிறது.
ஆனால் நமது பாதுகாப்புப் படையினர் அவர்களின் முயற்சியை அவ்வப்போது முறியடித்து வருகிறார்கள்.
ஆனாலும் 1989க்கு பின்னர் நமக்கு பலத்த சேதத்தை புல்வாமாவில் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
வெடிமருந்துகள் நிரப்பிய வாகனத்தை நமது சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பஸ் மீது மோதச் செய்து 49 வீரர்களின் விலை மதிப்பற்ற உயிரை பறித்திருக்கிறார்கள்.
இந்த வீரர்களின் குடும்பங்களுக்கு இந்திய மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் தலா 5லட்சம் வீதம் இரண்டரைக் கோடி ரூபாய் உதவி செய்திருக்கிறார்.
இதற்கான முறையான ஏற்பாடுகளை அந்தந்த மாநில அரசு வழியாக செய்து வருகிறார்.
வீர மரணம் அடைந்தவர்களில் தமிழகத்தை சேர்ந்த இருவர் இருக்கிறார்கள்.