முன்னணி காமடி நடிகர்களில் மயில்சாமியும் ஒருவர். சமூக அக்கறை உள்ளவர்.
இன்றளவும் சாலிகிராமம் ஸ்டேட் பாங்கு காலனியில் இருக்கிற பூங்காவுக்கு தவறாமல் வந்துவிடுவார்
அங்குள்ள குளத்து மீன்களுக்கு பிரட் வாங்கிப் போடுகிறார். வாத்துகளும் வாங்கி விட்டிருக்கிறார்.
வெள்ளப் பேரபாயம் வந்த போது விருகம் பாக்கம்,சாலிகிராமம் பகுதிகளுக்கு உணவுகள் வழங்கினார் .உதவிக்கு 20 இளைஞர்கள்.அவர்கள் அத்தனை பேரும் இரவு பகலாக நிவாரண வேலைகளில் ஈடுபட்டார்கள். அங்கேதான் ஒரு ரகசியம் வைத்திருக்கிறார் மயில்சாமி.! அதை எல்.கே.ஜி.பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் அவுட் ஆக்கி விட்டார்.
“அத்தனை பேரையும் அஜித் சாருடன் போட்டோ எடுக்க வைக்கிறேன் என்று சொன்னேன்..அதற்கு பின்னர் அஜித் சாரை நான் பார்க்கவில்லை. ஆனால் சொன்னசொல்லை இந்த மயில்சாமி மறக்கமாட்டான். கட்டாயம் அது நடக்கும் “என்றார்.