“என்னோட இலக்கே சென்னை கோட்டைதான். டெல்லி இல்லே. எவனும் என் படத்தையோ ,கொடியையோ பயன்படுத்தக்கூடாது” என்று பொடனியில் அடிச்சு சொல்கிற மாதிரி சொல்லிவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இந்த அறிக்கையில் அடி வாங்கியது பி.ஜே.பி. தான்..
மன்ற காவலர்களை வைத்து ஆள் இல்லா குறையை போக்கிடலாம் என நினைத்தவர்களுக்கு ரஜினியின் அறிக்கை அதிர்ச்சி.
இதைத் தொடர்ந்து அடுத்த இடியை இறக்கி இருப்பவர் உலக நாயகன் கமல்ஹாசன்.
திமுக,,அதிமுக.இரண்டு கட்சிகளின் தலைமைக்கும் சாட்டை அடி!
“சாராய ஆலை நடத்துபவர்கள் கட்சி நடத்துகிறபோது நடித்து முறையாக வரி கட்டும் நான் கட்சி நடத்தக்கூடாதா?”
என கேட்டிருக்கிறார்.. இதெல்லாம் மக்களுக்குத் தெரியாதா கமல் சார்?
தெரிஞ்சி தானே இத்தனை வருசமா ஓட்டுப் போட்டுக்கிட்டு வர்றாங்க!