தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்( பெப்சி)க்கு இன்று காலை தேர்தல் நடைபெற்றது. இதில் 22 யூனியன் சங்க நிர்வாகிகள் மொத்தம் 65 பேர் வாக்களித்தனர்.
22 யூனியன்களை உள்ளடக்கிய பெப்சியில் ஆர்.கே.செல்வமணி தலைவராகவும் அங்கமுத்து சண்முகம் செயலாளராகவும் பி.என்.சுவாமிநாதன் பொருளாளராகவும் இருக்கின்றனர்.இவர்கள் மூவரும் அவர்கள் வசிக்கும் பதவிக்கு மீண்டும் போட்டியிட்டனர். இதில் தலைவர்பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி – 49 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட அங்கமுத்து சண்முகம் – 50 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.பொருளாளர் Uதவிக்குபோட்டியிட்ட B.N.சுவாமிநாதன்- 47 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.ஆர்.கே.செல்வமணியின் அணியில் துணைத் தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட தீனா,ஷோபி பவுல்ராஜ்,ஶ்ரீதர்,செந்தில்குமார்,ராதாகிருஷ்ணன்,ஆகிய 5பேரும் ,
இணைச் செயலாளர்கள் Uதவிக்கு போட்டியிட்ட ஆர்.எஸ்.ராஜா,சபரி கிரீசன்,ரமண பாபு,
சம்பத் குமார்,ஸ்ரீபிரியா,ஐவரும் போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்ரமணியம் செயலாற்றினார்இன்று மாலை 6.00 மணிக்கு வடUழனி நூறடி சாலையில் உள்ளபெப்சி அலுவலகத்தில் வெற்றி பெற்ற அனைவரும் பதவியேற்று கொண்டனர்.வெற்றி பெற்ற பெப்சி தலைவர் R. K. செல்வமணி மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து தெரிவித்து உள்ளது.