சினிமா ஒரு மாய உலகம்.
ஒரே நாளில் ஒருவரை உச்சம் கொண்டு செல்லும். மறுநாளே அவரை தேடப்படுவோர் பட்டியலுக்குக் கொண்டு போய்விடும்.
இது புரியாமல் ஆடுவோர் அடி மட்டத்தில் இருப்பார்கள். சைடு டிஷ் பொட்டுக்கடலையுடன் தண்ணி அடிக்கும் பிரபலங்களை பார்த்திருக்கிறது திரை உலகம்.
60 + சீனியர் சிட்டிசன்களுடன் நடிப்பதற்கு புதிய நடிகைகள் தயங்குகிறார்கள். விதி விலக்கு சூப்பர் ஸ்டார்கள்.
ஆனால் இவர்களுடன்பிரியாவாரியர் போன்றவர்களை ஜோடி போட வைக்க இயக்குநர்கள் தயங்குகிறார்கள்
ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள் என்கிற பயம்.
ஆனால் இதே நிலை அக்கட பூமியில் இருக்கா? லேது !
நேற்று வரை நாகார்ஜுனா,வெங்கடேஷ் ஆகிய நடிகர்களுடன் நடிப்பதற்கு ரெடியாக இருந்தவர்கள் தற்போது பின் வாங்குகிறார்கள்.
ஆனால் பாயல் என்கிற நடிகை “பரவாயில்லை,நான் நடிக்கிறேன்”என்று முன் வந்திருக்கிறார்.இதை ரசிகர்கள் ரசிப்பார்களா என்கிற பயம் வந்திருக்கிறது.