, “பல பெரிய வெற்றிப் படங்களை நான் புறக்கணித்து வந்திருக்கிறேன். அந்த நாயகி கதாபாத்திரங்களை புறக்கணித்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை, ஏனெனில் அந்த கதாப்பாத்திரங்களில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கான சிறப்பான விஷயங்கள் ஏதும் இல்லை” என்று சொல்கிறவர் யார் தெரியுமா?
கீர்த்தி பாண்டியன். பிரபல தயாரிப்பாளர்,நடிகர் அருண் பாண்டியனின் மகள்.
கனா புகழ் தர்ஷன் நடிக்கும் ஃபேண்டஸி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார்.
“நான் எங்கிருந்து வந்தேன், என் பின்னணி என்ன என்பதை வெளியில் காட்ட விரும்பவில்லை. நான் பல ஆடிஷன்களில் கீர்த்தி என்ற பெயரில் கலந்து கொண்டிருக்கிறேன், அவைகளில் நிராகரிக்கப்பட்டும் இருக்கிறேன். நான் சொன்னது போல, நான் நிராகரித்த சில படங்கள் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றுள்ளன. நான் ஒரு நல்ல நடிகை என்ற பெயரையே பெற விரும்புகிறேன். நடிப்பின் நுணுக்கங்களை கற்றுக் கொள்ள மேடை நாடகங்களில் கலந்து கொண்டிருக்கிறேன்” என்றார்.
கீர்த்தி பாண்டியன் நடிப்பு சல்சா மற்றும் பாலே நடன கலைஞர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு ஒரு பெரிய மேடை நாடகத்தை தயாரிக்க இருக்கிறேன்” என்கிறார்.
இந்த காமெடி அட்வென்சர் திரைப்படத்தை இயக்குனர் துரை செந்தில்குமாரின் முன்னாள் உதவியாளரான ஹரீஷ் ராம்இயக்கியிருக்கிறார்.