இப்ப பாமக.வுக்கு பக்கா எதிரி கருத்துக் கஸ்தூரிதான் !
அதிமுகவின் அண்டசராசங்களை அலசி காயப்போட்டு வந்தவர் பாமக தலைவர் ராமதாஸ்.
நாலு வார்த்தை என்றாலும் மானஸ்தர்களின் மென்னியைப் பிடிக்கிற மாதிரி அதிமுக முதல்வர்,துணைமுதல்வரை கேள்வி கேட்டார்.
ஆகா தமிழ்நாட்டிலும் கங்கை ஓடுகிறது என மக்கள் நம்பினார்கள்.(அவர்கள் எதைத்தான் நம்பவில்லை?)
இன்று திடீரென அந்த அதிமுகவுடனேயே கூட்டு.! இதற்கு ஏதாவது காரணம் சொல்வார்கள்.!
இந்த கூட்டுப் பொரியலைப் பற்றி கருத்துக் கஸ்தூரி துணிந்து கருத்து சொல்லி இருக்கிறார்.
ரஜினியின் பொட்டியையே தூக்கிட்டு போனவங்கம்மா! ஒன்னு கெடக்க ஒன்னு ஆகிடப்போவுது.உஷாரு தாயி!
“எப்போதுமே பாமகவுக்கு NDA வில்தான் அதிக சீட்டு கிடைக்கும். BJP கூட்டணியில் போன முறை மிக அதிகமாக 8 சீட்டுக்கள் – வென்றது 1 மட்டுமே. இந்த முறை வென்றாலும் வெல்லாவிட்டாலும் ஒரு MP பதவி நிச்சயம் . வேறு என்ன வேண்டும்?வெற்றிதான் கொள்கை.பதவிதான் பாலிசி”
இதுதான் கஸ்தூரியின் பதிவு!