தெலுங்கில் வெளியாகி பெரும் வரவேற்புபெற்ற அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக், பாலா இயக்கத்தில்,வர்மாவாக உருவாகி நடிகர் விக்ரம் மகன் துருவ்விக்ரம் அறிமுகமான படம்அப் படத்தின் தயாரிப்பாளருக்கு திருப்தியளிக்காத நிலையில்,கைவிடப்பட்டதாக வர்மா படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஈ4 எண்டர்டெயின்மெண்ட் அறிவித்து, இந்த படத்தை முதலில் இருந்து மீண்டும் படமாக்கப்படவுள்ளதாக அறிவித்தது.இயக்குனர் பாலாவும், படைப்பு சுதந்திரம் கருதி, வர்மா படத்தில் இருந்து விலகிக்கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு. இந்த படத்தில் இருந்து கடந்தஜனவரி மாதமே விலகிவிட்டதாகவும், விலகுவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தையும் அவர் வெளியிட்டு, விளக்க அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். இந்நிலையில் அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் சந்தீப் ரெட்டியின் உதவியாளரான கிரிசய்யா இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்முறை துருவ் விக்ரமுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை பனிடா சந்து நடிக்கிறார். மேலும் ப்ரியா ஆனந்த் அவராகவே நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. படத்திற்கு ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். 7ம் அறிவு படத்திற்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து தமிழ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் அவர். வர்மா படம் குறித்து இன்று மாலை துருவ விக்ரமின் புதிய தோற்றத்துடன் பர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. படத்தின் பெயரை ‘ஆதித்ய வர்மா’ என்று மாற்றியுள்ளனர்.ரதன் இசையமைக்கிறார்.