ஷங்கரின் இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்காக ஒப்புக்கொண்டு கோடிகளில் பணம் வாங்கி இருக்கிறார் நடிகர் வடிவேலு.!
ஆனால் இயக்குநர் சிம்புதேவனுடன் பிரச்னை ,காட்சிகளில் தலையிடல் என பல சிக்கலை வடிவேலு ஏற்படுத்தியதாக தயாரிப்புத் தரப்பில் சொல்லப்பட்டது.பல கோடிகளில் போடப்பட்ட செட்டுகளையும் கலைக்க வேண்டியதாகி விட்டது.
பேச்சு வார்த்தைகளும் பயன்படவில்லை. இதனால் தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலு நடிப்பதற்கு தடை போட்டது. பெப்சி தரப்பும் தயாரிப்பாளர்களுக்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்தது.
ஆனால் தடை இருப்பது தெரிந்தும், மாரி செல்வராஜ், சுராஜ்,ஷக்தி சிதம்பரம் ஆகியோர் படங்களில் வடிவேலு நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தன.அதிகாரப்பூர்வமான செய்தியா என்பது தெரியாது.
இதற்கிடையில் வடிவேலுக்காக சமாதான பேச்சில் சீமான் இறங்கி இருப்பதாக.சொல்கிறார்கள். ஒருவேளை ஷங்கரிடம் வாங்கிய பல கோடி முன்பணத்தை வடிவேலு திருப்பித்தர சம்மதம் தெரிவித்திருப்பாரோ என்னவோ! வடிவேலு மீண்டும் நடிப்பதற்கு வந்தால் சரி,!
ஆனால் தயாரிப்பாளர்கள் சங்கம் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களை அழைத்து தடை இன்னும் நீக்கப்படவில்லை என்பதை சொன்னதாக தெரிகிறது.