இன்னும் இழுவை பறிதான் என்கிறது தேமுதிக வட்டாரம்.
வட மாவட்டங்களில் மட்டுமே சொல்லிக்கொள்ளும் அளவுக்கு செல்வாக்கு உள்ள பாமக.வுக்கு 7 தொகுதிகள் பிளஸ்1 என்று அதிமுக கூட்டணியில் ஒதுக்கப் பட்டிருக்கிறது.
ஆனால் வடக்கிலும் தெற்கிலும் செல்வாக்கு பெற்றுள்ள கட்சி தேமுதிக. ஆகவே தொகுதி உடன்பாட்டில் தங்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதில் பிரேமலதா விஜயகாந்த் உறுதியாக இருக்கிறாராம்.
இதனால் சென்னை வந்த பிஜேபி மத்திய அமைச்சர் பியூஸ் கோயலினால் உறுதியான முடிவுக்கு வரவில்லை.
எப்படியும் தங்கள் வழிக்கே விஜயகாந்த் வந்து சேருவார் என்று பிஜேபி நம்புகிறது.
காங்.கட்சிக்கு 10 இடங்களை ஒதுக்கி திமுக ஒரு முடிவுக்கு வந்து விட்ட நிலையில் தேமுதிகவினால் வேறு அணிக்கு செல்ல முடியாது.
ஆகவே குறைந்த இடங்களை ஒப்புக்கொள்ளும் நிலையில் விஜயகாந்த் இருக்கிறார் .எனவே விட்டுப்பிடிப்போம் என மேலிடம் சொல்லி விட்டதாக தெரிகிறது.
இதனால் இன்றைய சந்திப்பு மரியாதை நிமித்தம் நடந்ததாக தேமுதிக சொல்லி இருக்கிறது.
பாமகவை விட குறைந்த அளவில் இடம் பெற பிரேமலதா ஒப்புக்கொள்வாரா?
குறைந்த இடம் பெறுவதென்றால் மத்திய கேபினட்டில் தங்களுக்கு இரண்டு இடங்கள் தரவேண்டும் என்பது நிபந்தனையாக இருக்கும் என்கிறார்கள்.