லைகாவின் பிரமாண்ட தயாரிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வருகிறது இந்தியன் 2.உலகநாயகன் கமல் காஜல் அகர்வால் நடித்து வருகிறார்கள்.
அடுத்த வருஷம் ஜனவரியில் ரிலீஸ் என்கிற முனைப்புடன் தயாராகி வருகிற இந்தப் படம் கை விடப்பட்டதாக சில செய்திகள்.
ஷங்கருக்கு கமல்ஹாசனின் ஒப்பனை பிடிக்கவில்லை அதனால் சிக்கல் என இன்னொரு சேதி. வில்லன் இன்னமும் கிடைக்கவில்லை அதனால் தாமதமாகும் என்பதாகவும் ஒரு சேதி.!
கடைசியாக லைகாவுக்கு பணக்கஷ்டம் அதனால் படம் வருமா என்றும் ஒரு தகவல்.இது ரிசர்வ் வங்கியிலேயே பணம் இல்லை என்பது மாதிரி!
என்னதான்யா நடக்கிது?
சென்னை விக்டோரியா மெமோரியலில் முக்கியமான காட்சியை ஷங்கர் எடுத்து முடித்திருக்கிறார் .இ.வி.பி பிலிம் சிட்டியில் அவசியமான காட்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இவை போக சென்னைக்கு வெளியே மிகப்பெரிய செட் போடப்பட்டு வருகிறது. ஏப்ரல்.மே யில் தாய்லாந்து,ராஜமுந்திரியில் ஷூட்டிங்…இப்படி பக்காவாக போகிறது பிளான். அடுத்த வருஷம் ஜனவரியில் ரிலீஸ்.இதை விட வேற என்ன வேணும் என்கிறார்கள் லைகா தரப்பில்.!
எல்லாம் சரி.அவ்வப்ப சினிமா ஸ்டில்களையும் விடுங்க சார்!