காலை 11 மணி அளவில் சாலிகிராமத்துக்குள் சூப்பர்ஸ்டார் என்ட்ரி. ரஜினி வருவது முன்னதாகவே தெரிவிக்கப்பட்டிருந்ததால் வாசலில் வந்து வரவேற்றார் சுதீஷ். உள்ளே சென்றதும் கேப்டன் விஜயகாந்த் புன்னகைத்தபடியே கை கொடுத்தார். அருகில் பிரேமலதா விஜயகாந்த்.
“விஜி! எப்படிஇருக்கீங்க? என்று ரஜினி கேட்டபடியே பேசத் தொடங்கினார்.
அரைமணி நேர உரையாடல்.
சிங்கப்பூரில் டிரீட்மெண்ட் எடுத்த பிறகு ரஜினியும் அவ்வப்போது அமேரிக்கா சென்று செக் அப் செய்து கொள்வதால் இந்த சந்திப்பு. கேப்டனுக்கும் அதே சிகிச்சைதான்!
வெளியே வந்ததும் செய்தியாளர்களிடம் “நாங்கள் அரசியல் எதுவும் பேசவில்லை.அவரது அமெரிக்க சிகிச்சை பற்றி பேசினோம்.நான் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று திரும்பிய பின்னர் முதலில் வந்து என்னை வந்து சந்தித்தவர் விஜயகாந்த்”என்று சொல்லிவிட்டு விடைப் பெற்றார் சூப்பர் ஸ்டார்.