இளவரசு பட்டம் சூட்டப்படாவிட்டால் என்ன, நாளைக்கு அவருக்குத்தானே அரசு கிரீடம்?
அப்பாவைப் போலத்தான் கடுமையாகப் பேசுகிறார் கேப்டனின் மகன் விஜயபிரபாகரன்.
“விஜயகாந்துக்கு உடம்பு சரியில்ல, தேமுதிகவுக்கு வாக்கு வங்கி ரெண்டு சதவீதம்தான்னு சொல்றவங்க ஏன் எங்க வீட்டு வாசல்ல காத்திருக்கீங்க?”என்று கேட்டதுடன் நில்லாமல் தொண்டர்களை தைரியமாக இருக்க சொல்லி இருக்கிறார்.
“தேமுதிக தொண்டர்கள் யாருக்கும் பயப்படக்கூடாது.நாம் இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. விஜயகாந்த் சிங்கம் மாதிரி வருவார்.பன்றிகள்தான் கூட்டமாக வரும்” என்று கும்பகோணத்தில் பேசி இருக்கிறார்.
யாரை சொல்றார்னு தெரியலியே?