என்னமோ போங்க!
மீ டூ வின் ஜ்வாலை இல்லாவிட்டாலும் நெருப்புக்கங்குகள் இன்னமும் அணைய வில்லை. கனன்றபடியே இருக்கிறது.
மா தமிழ் குறும்படத்தில் நடித்தவர் கனி குஸ்ருதி. மலையாள நடிகை. பெயரும் புகழும் வந்தாலும் ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்”எனச்சொல்லி விலகிப் போய் விட்டவர்.
ஏன் கனி கசந்தது?
“எல்லாம் பாலியல் தொல்லைகள்தான்! சினிமாவை விட்டு ஓடினதே அதற்கு பயந்துதான்! தயாரிப்பாளர்களின் தொல்லைகள் தாங்க முடியல சாமி ! சிலர் என்னை அதுக்கு அனுப்பச்சொல்லி அம்மாவிடம் சிபாரிசுக்கு நிற்கிறார்கள். விளங்குமா!” என்கிறார்.